திட்டக்குடி அருகே பெண்ணாடம் (சுமை)தாங்கி- வெண்கரும்பூர் வரை புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலையின் இருபுறமும் மணலை கொட்டி சமப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எதிர் வரும் வாகனங்களுக்கு மற்ற வாகனங்கள் வழி விட முயலும் போது சாலையோர பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் மணலை கொட்டி சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.