கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறை அருகே பொன்னன்படுகை சாலையில் மூல வைகை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. மேலும் தடுப்புச்சுவர்களிலும் செடிகள் ஊடுருவி வளர்கின்றன. இதனால் பாலத்தின் தடுப்புச்சுவர் பலம் இழந்து விரிசல் விடத்தொடங்கியுள்ளது. எனவே புதர்களை அகற்றுவதுடன், தரைப்பாலத்தை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.