தர்மபுரி பிடமனேரி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் சென்று வருகிறார்கள். இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.