குண்டும், குழியுமான சாலை

Update: 2024-12-08 14:49 GMT
திருச்சி மாவட்டம், கருப்பம்பட்டியில் இருந்து பனந்தோப்பு வழியாக கீரிப்பட்டி செல்லும் சுமார் இரண்டு கிலோ மீட்டர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை காட்டுக்கொட்டைகளில் வசிக்கும் சுமார் 100 குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கைகயை அடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை முடியவில்லை. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்