சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-12-08 12:03 GMT

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாண்டியன்நகர்4-ம் தெருவில் சாலை நடுவே பாதாள சாக்கடை குழி உள்ளது. இந்த குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சென்றது. இதனால் சாலையை பெயர்த்து பாதாள சாக்கடை குழி சீரமைக்கபட்டது. ஆனால் சாலை பெயர்க்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் தற்போது வரை சாலை சீரமைக்கபடவில்லை. இதனால் தார்சாலை தற்போது மண்சாலைபோல மாறி சேறும்,சகதியுமாக இருக்கிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்