குண்டும்,குழியுமான சாலை

Update: 2024-12-08 12:03 GMT

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் சாத்தனூர் ஊராட்சியில் மல்லார்பேட்டை-புதூர் சாலை உள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து இருக்கிறது. சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் அவ்வழியாக சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மல்லார்பேட்டை-புதூர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்