மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில்,பரசலூர்,நல்லாடை சாலைகளில் குதிரைகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவற்றால் சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திடீரென சாலையில் நிற்கும் குதிரைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் குதிரைகள் சாலை நடுவே படுத்துக்கொள்வதால் விபத்துகளும் நடக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.