மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட பனவிளையில் இருந்து முரடகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும், சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைக்கப்படாததால் மழைநீர் சாலையில் பாய்ந்து செல்வதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மக்கள் நலன்கருதி வடிகால் ஓடை அமைத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரேம்ராஜ், வாறுதட்டு.