வெள்ளிச்சந்தை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளமோடி-வெள்ளிச்சந்தை சாலையின் ஓரத்தில் பட்டுப்போன பனைமரம் ஒன்று ஆபத்தான நிலையில் நிற்கிறது. காற்றின் வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் அந்த மரம் சாலையில் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி ஆபத்தான நிலையில் நிற்கும் மரத்தை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வராஜ், வெள்ளமோடி.