திங்கள்சந்தையில் இருந்து தோட்டியோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இரு பக்கங்களிலும் சில ஆண்டுகளுக்கு முன் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தன. அதன்பிறகு சாலை முறையாக சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வடக்கு நுள்ளிவிளையில் இருந்து நுள்ளிவிளை மெயின் ரோடு சேருமிடம் மற்றும் கண்டன்விளை பகுதியில் அணுகு சாலையில் இருந்து மெயின் ரோட்டுக்கு வாகனங்கள் வந்து சேரும் இடத்திலும் அபாய விளக்குகள் பொருத்தி விபத்துகளை தவிர்க்கவும், திங்கள்சந்தை-தோட்டியோடு சாலையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோஸ்பின், நுள்ளிவிளை.