திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, திருப்பைஞ்ஞீலி ஊராட்சி, வாழ்மாழ்பாளையம் கீழூர், புதுகுளம் இருந்து குருவம்பட்டி வரை செல்லும் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் நபர்கள் மற்றும் கோவிலுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.