தர்மபுரி வேப்பமரத்து கொட்டாய் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் தார்ச்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த தார்ச்சாலையை சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.