மதுரை மதிச்சியம் 30-வது வார்டு முத்து தெரு சாலை பல வருடங்களாகவே சேதமடைந்த நிலையில் குண்டும் குழியுமாகவே உள்ளது. இதனால் இப்பாதையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் தற்போது மழை காலம் என்பதால் சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி சகதி காடாக மாறி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் சாலையை சீரமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?.