தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2024-12-01 13:24 GMT

அரியலூரில் இருந்து நொச்சிக்குளம் செல்லும் சாலையின் குறுக்கே ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. இதனை இந்த ரெயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கலந்து செல்லும் வகையில் குகைவழி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் போது மழை நீர் இந்த குகைவழி பாதையில் தேங்கி நிற்பதினால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மழை நேரத்தில் இந்த பாலத்தை கடந்து செல்ல பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்