குண்டும், குழியுமான சாலை

Update: 2024-12-01 11:41 GMT

கரூர் மாவட்டம் மணவாடி ஊராட்சி, கத்தாளப்பட்டி ஐந்து ரோடு பகுதியில் இருந்து செல்லிபாளையம், ரெங்கபாளையம் வழியாக உப்பிடமங்கலத்திற்கு தார் சாலை செல்கிறது. இந்த சாலையில் ஐந்து ரோடு பகுதியில் இருந்து உப்பிடமங்கலம் பேரூராட்சி எல்லை ஆரம்பம் வரை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி வாகனங்களில் செல்வதற்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மழைக்காலங்களில் அந்த குழிகளில் மழைநீர் தேங்கி நின்று சேறும், சகதியுமாக மாறி சாலையை மேலும் சேதம் அடைய வைக்கிறது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்