நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 39-வது வார்டில் மாலிக் தீனார் பள்ளிவாசல் முன்புறம் இருந்து ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையின் நடுவே கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சாலையின் ஒரு இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைத்திட வேண்டும்.