தடுப்பு சுவர் அமைக்கலாமே!

Update: 2024-11-24 17:33 GMT

நாமகிரிப்பேட்டையில் இருந்து பேளுக்குறிச்சி செல்லும் சாலையில் அரியாக்கவுண்டம்பட்டி ஏரி உள்ளது. இந்த சாலை குறுகலாக இருப்பதால் கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே ஏரிக்கரையோரம் தடுப்பு சுவர் அமைத்து சாலையை விரிவாக்கம் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை முன்வருவார்களா?

-தம்பி, நாமகிரிப்பேட்டை.

மேலும் செய்திகள்