மோசமான சாலை

Update: 2024-11-24 14:03 GMT

சென்னை பள்ளிக்கரணை, ராம்நகர் விரிவு 6-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் செல்வதற்காக சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டது. பணி முடிந்த பின்னர் பள்ளத்தை மூடாமல் சென்று விட்டனர். இதனால் மழைநீர் சாலை உள்ள பள்ளத்தில் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்பவர்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் வழுக்கி விழுகின்றனர். எனவே சாலையை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது