பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் 2-வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ்நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜீவ் நகரில் அமைக்கப்பட்டுள்ள சாலை தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக மாறி மண் சாலை போல் காட்சி அளிக்கிறது. இதனால் மழை பெய்யும்போது சில இடங்களில் சேறும், சகதியுமாக காணப்படுவதுடன் சாலையில் ஆங்காங்கே பள்ளம் இருப்பதினால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.