விஷ ஜந்துகள் நடமாட்டம்

Update: 2024-11-24 12:25 GMT

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பால் விநாயகர் நகர் முதல் கே.எஸ்.சி. பாலம் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த சாலையோரம் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அதில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த சாலையை சீரமைப்பதோடு புதர் செடிகளை வெட்டி அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்