அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம் உள்ளிட பகுதிகளில் தார் சாலை முழுவதும் மண்ணாக காணப்படுகிறது. சிமெண்டு ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களில் இருந்து கொட்டும் மண், லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் மண் உள்ளிட்டவை காற்றில் பறந்து சாலையில் விழுந்து சாலை முழுவதும் மண்ணால் மூடியவாறு காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்களில் படுவதால் அவர்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். மேலும் மழை நேரங்களில் இந்த சாலைகளில் உள்ள மண் மீது செல்லும் வாகனங்கள் வழுக்கி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு சாலைகளை மண் மூடாமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.