சாலையில் பள்ளம்

Update: 2024-11-17 18:14 GMT

தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு செல்லும் தார்சாலையில் ரெயில்வே திருமண மண்டபத்திற்கு அருகே பள்ளம் காணப்படுகிறது. இந்த பகுதி சீரமைக்கப்படாமல் இருப்பதால் இரவு நேரங்களில் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மற்றும் நடந்து வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இந்த தார்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், தர்மபுரி.

மேலும் செய்திகள்