கொடுமுடியை அடுத்த தாமரைபாளையம் அருகில் ஈரோடு கரூர் மெயின் ரோட்டில் லட்சுமிபுரத்தில் இருந்து குமரப்பபுரம் வரை 1 கிலோ மீட்டர் தூரம் வரை தார் சாலை அமைக்க ரூ.22 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதைத்ெதாடர்ந்து அதற்கான பணிகள் தொடக்க விழா கடந்த கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மேலும் அங்கு ஏற்கனவே இருந்த தார் சாலை முழுவதும் அகற்றப்பட்டது. ஆனால் பணி நடக்காமல் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அந்த சாலை முழுவதும் கற்களாக சிதறி கிடக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள், மாணவ- மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.