கரூர் பஞ்சமாதேவி மின்னாம்பள்ளி ஊராட்சியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டி அதற்காக சாலைகள் சமபடுத்தப்பட்ட நிலையில் சாலை பணி அப்படியே கடந்த 1 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையை பயனபடுத்த முடியாமல் இப்பகுதி மக்கள் மிகவும் சிரம்மப்படுகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.