ஏம்பலம் தொகுதி கந்தன்பேட் விரிவாக்கம் பகுதியில் உள்ள சப்தகிரி நகருக்கு செல்லும் பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே விபத்தை தடுக்க சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.