அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விளந்தை அங்காளம்மன் கோவில் தெரு சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் ஓட வழியில்லாமல் நடுரோட்டிலேயே குளம்போல் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியே செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி கீழே விழுந்து காயத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்து. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.