நாமக்கல்-மோகனூர் செல்லும் வழியில் வகுரம்பட்டி பிரிவு சாலையில் சிங்கிலிபட்டி கிராமம் உள்ளது. இந்த கிராம பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லி கற்கள், மணல் கொட்டப்பட்டது. ஆனால் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களும் பழுதடைகின்றன. எனவே பாதியில் நிறுத்தப்பட்ட தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-விஜயன், சிங்கிலிபட்டி.