குண்டும், குழியுமான சாலை

Update: 2024-10-27 17:05 GMT

பர்கூர் தாலுகா குட்டூரில் இருந்து காரிமங்கலத்தானூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிறு, சிறு விபத்தில் சிக்கிய வண்ணமே உள்ளனர். மேலும் இது பருவ மழைக்காலம் என்பதால் சாலையெங்கும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் விரைந்து தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

-பன்னீர், பர்கூர்.

மேலும் செய்திகள்