ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சாலையில் தண்ணீர் அங்காங்கே தேங்கி உள்ளது. மேலும் இதில் கழிவுநீரும் கலப்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தி அதிகரித்து விட்டது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.