சேலம் மாநகராட்சி 22-வது கோட்டத்திற்கு உட்பட்ட சிவதாபுரம் நம்பியான் வட்ட பகுதியில் சாலையையொட்டி 2 கிணறுகள் உள்ளன. இதில் ஒரு கிணறுக்கு போடப்பட்ட தடுப்பு சுவர் பக்கவாட்டில் இடிந்து விழுந்ததில் சாலை சரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதேபோல் மற்றொரு கிணற்றின் தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்படும் முன்பாக இந்த கிணறுகளை சுற்றி புதிய தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
-தமிழ், சேலம்.