குண்டும், குழியுமான சாலை

Update: 2024-10-20 18:23 GMT

எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி காளிசெட்டிப்பட்டி- பீமநாயக்கனூர் செல்லும் சுமார் 3 கிலோமீட்டர் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக பீமநாயக்கனூர், நாமக்கல் செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் இரவு நேரம் வருவோர் சாலையில் உள்ள பள்ளம், மேடு தெரியாமல் தவறி கீழே விழுகின்றனர். எனவே இந்த சாலையை விரைந்து சீரமைப்பார்களா?

-சண்முகம், எருமப்பட்டி.

மேலும் செய்திகள்