சேறும், சகதியுமான சாலை

Update: 2024-10-20 18:03 GMT

தேன்கனிக்கோட்டை அருகே குந்துகோட்டை ஊராட்சியில் ஏணிபண்டை கிராமம் உள்ளது. இந்த கிராம இணைப்பு சாலை மண்சாலை என்பதால் பருவ மழையால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த பகுதி பொதுமக்கள் தினசரி மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றார்கள். இதனால் சிலர் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் ஆபத்தான முறையில் செல்ல வேண்டி உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து தார்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

-மாதன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்