வடலூர் அடுத்த மருவாய் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிய வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடு்க்க வேண்டும்.