வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-10-20 14:21 GMT

அரியலூர் மாவட்டத்தில் எண்ணற்ற சிமெண்டு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலை முக்கிய பிரதான சாலையாகும். இந்த சாலை வழியாக சிமெண்டு ஆலைகளுக்கு குறிப்பாக வி.கைகாட்டி, காட்டுப்பிரிங்கியம், அஸ்தினாபுரம், வாலாஜா நகரம் வழியாக ஓய்வின்றி டிப்பர் லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கல் எடுத்துச் செல்லப்படுகிறது. மேலும் மற்ற கனரக வாகனங்கள் மூலம் சிமெண்டு மூட்டைகள், நிலக்கரிகள் ஏற்றி செல்லப்படுகிறது. சுண்ணாம்புக்கல் லாரிகள் வேகமாக செல்லும்போது லாரிகளில் இருந்து சிதறி சாலையில் விழும் சுண்ணாம்புக்கல் அகற்ற படுவதில்லை. இந்த மண்கள் மழை காலத்தில் சேறு, சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்