கரூர் பஞ்சமாதேவி மின்னாம்பள்ளி ஊராட்சி அரசு காலனியில் அமைக்கப்பட்டிருந்த சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் அதனை அகற்றிவிட்டு சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிமெண்டு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.