ஏரியூரில் இருந்து மேச்சேரி செல்லும் பிரதான சாலையில் செல்லமுடி பஸ் நிலையப் பகுதியில் தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப்பாலத்தின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படவில்லை. இந்த சாலையை தினசரி 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. தடுப்புச்சுவர் இல்லாத நிலையில் சிறு சிறு விபத்துக்கள் நடந்த வண்ணமே உள்ளன. எனவே இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதாமுருகன், செல்லமுடி.