சேலம் ஜங்ஷன், இரும்பாலை ரோடு, புது ரோடு, முத்துநாயக்கன்பட்டி பிரிவு சாலையின் ஒரு பாதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்தி விபத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா?
-வெங்கடசலம், சுந்தர்நகர்.