தர்மபுரி, வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் அருகில் இலக்கியம்பட்டியில் பெரிய பெருமாள் கவுண்டர் தெரு உள்ளது. இந்த சாலை சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் சாலை உள்ளது. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் குழியில் தவறி விழுந்து காயமடைகிறார்கள். பெரிய அளவில் விபத்துகள் நடப்பதற்குள் இந்த சாலையை சரிசெய்ய வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
-செந்தில்வேலன், தர்மபுரி.