ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் பேரூராட்சியில் அனைத்து தெருக்களிலும் குழாய்கள் பதிக்க குழிகள் தோண்டி அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியை கடந்து செல்ல நடைபாதையினர் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இச்சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.