பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2024-09-29 18:04 GMT

சேலம் அம்மாபேட்டை மெயின் ரோடு முதல் பட்டைக்கோவில் வரை செல்ல தற்போது பால பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணி மிகவும் மந்த கதியில் நடக்கிறது. இதனால் பழைய பஸ் நிலையம் வர வேண்டும் என்றால் மிலிட்டரி ரோடு வழியாக செல்ல வேண்டும். இதனால் கால தாமதமும், அலைச்சலும் ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பால பணியை விரைந்து முடிப்பார்களா?

-வேலாயுதம், சேலம். 

மேலும் செய்திகள்