விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சாலை பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே பருவமழை தொடங்குவதற்கு முன் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.