அரியலூர் மாவட்டம் செந்துரையில் இருந்து ஆர்.எஸ்.மாத்தூர் செல்லும் வழியில் இலைக்கடம்பூர் அருகே சாலை ஓரத்தில் உள்ள ஒரு மரம் காய்ந்து பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மரத்தின் கிளைகள் உடைந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சாலையில் மரம் சாய்ந்தால் போக்குவரத்து தடைபடும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.