அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிகுறிச்சி கிராமம் சி.பி.எஸ்.நகரில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு இதுவரை தார்ச்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மண் சாலையில் மழை பெய்யும் போது மழைநீர் குளம்போல் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் முதியவர்கள், சிறுவர்- சிறுமிகள், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.