குண்டும், குழியுமான தார்ச்சாலை

Update: 2024-09-29 12:44 GMT

அரியலூர் மாவட்டம், முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள கங்கவடங்கநல்லூரில் இருந்து காட்டுக்கொல்லை மெயின் ரோடு வரை உள்ள தார்ச்சாலை மிகவும் சிதிலமடைந்து மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதம் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்