கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி முதல் நாலு ரோடு (லிங்கம நாயக்கன்பட்டி பிரிவு) வரை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.