சர்வீஸ் ரோடு மோசம்

Update: 2024-09-22 17:13 GMT
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இருந்து தேவர்குளம் செல்லும் சாலையில் நாற்கர சாலைக்கான சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. அந்த ரோடு, கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெரு மழை வெள்ளத்தில் அரித்து செல்லப்பட்டது. அதன்பின்னர் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே ரோட்டை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்