கறம்பக்குடி அருகே மாங்கோட்டை புதுப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் பள்ளம் ஏற்பட்டு மழை பெய்தால் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து கலெக்டர் கவனத்திற்கு செல்லவே அப்பகுதியை மேடாக சீரமைக்கும் படி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் மண் கொட்டி குவிக்கப்பட்டது. ஆனால் 15 நாட்களாக அந்த மணல் குவியல் பள்ளத்தில் சமப்படுத்த படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே மண் குவியலை நிரவி சாலையை சமப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்