கொல்லிமலையின் மைய பகுதியாக செம்மேடு உள்ளது. அங்கிருந்து பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு சென்று வரலாம். அதேபோல அங்கிருந்து சீக்குப்பாறைப்பட்டி காட்சி முனையம், வாசலூர்பட்டி படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா ஆகியவற்றை கண்டு ரசிக்க சென்று வரலாம். அந்த பகுதிகளின் தொடக்கம் செம்மேடு பிரதான சாலையில் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் சென்று வரும்போது விபத்துக்களை தடுக்கும் விதமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு செம்மேடு பஸ் நிலையம் எதிர்புறம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலையை 2-ஆக பிரித்து இருந்தனர். இதனால் அந்த வழியில் வாகனங்கள் எளிதாக சென்று வந்தன. தற்போது அங்கிருந்த இரும்பு தடுப்புகள் திடீரென அகற்றப்பட்டுள்ளது. இதனால் அங்கு விபத்துக்கள் நேரிடும் அபாயம் உள்ளது. எனவே மீண்டும் இரும்பு தடுப்புகளை அமைக்க வேண்டி அப்பகுதியினர் எதிர்பார்த்து வருகின்றனர்.