அரியலூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் புஜங்கராயநல்லூர், கூடலூர் உள்ளிட்ட ஊர்களை இணைக்கும் வகையில், அரியலூர் குறிஞ்சி ஏரி அருகே சாலை செல்கிறது. இந்த சாலையின் மூலம் அந்த வழியாக உள்ள ஊர்களுக்கு எளிதில் சென்றுவிட முடியும். இந்நிலையில், இந்த சாலையானது மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் குறுகலாகவும் சாலையோரங்களில் கருவேல மரங்கள் முளைத்தும் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் எதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்கி செல்ல முடியாமல் திணறுகின்றனர். மேலும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் கீழே விழுந்து காயமடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.