பெரம்பலூர் ரோவர் பள்ளி சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு மற்றும் மழைக்காலங்களில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.